Saturday, October 13, 2012

”உறுப்பு தானம்” பற்றிய எனது கவிதை. இதற்கு கத்தர் தமிழர் சங்கம் நேற்று நடத்திய போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.

நாமும் ஆகலாம் சீதக்காதி

சிறுவாணிக்குப் பெயர் போன நகர் கோவை – அங்கே
கருவாகி உருவாகி திருவாகி நின்றாள் ஒரு பாவை
அவளுக்கு வயது இனிய பத்தொன்பது
அவளது நற்குணங்களை என்னென்பது?

வாங்கினாள் அவள் ஒரு கல்லூரிப் பட்டம்
மேலே வேலைக்குப் போக திட்டம்
சீக்கிரமே வந்தது ஓர் ஓலை
மைசூரில் அவளுக்கு வேலை

குடும்பத்தில் அனைவர்க்கும் மகிழ்ச்சி
அப்போது தான் நடந்தது அந்தக் கொடும் நிகழ்ச்சி
அவள் வெளியே செல்லும் வேளையில்
விபத்துக்குள்ளானாள் சாலையில்

கோவை நகரமே பதறியது
பெண்ணின் நிலை கண்டு கதறியது
மருத்துவர்கள் விடாது போராடினர்
உற்றார்கள் இறைவனிடம் மன்றாடினர்

ஆயினும் காலன் குறித்து விட்டால் நாளை
நாம் காப்பாற்ற முடியுமோ ஒரு ஆளை?
பெண்ணுக்கு நிகழ்ந்தது மூளைச்சாவு (ப்ரெயின் டெட்)
சாலை விபத்துக்கு இன்னொரு காவு

இங்கு தான் கதையில் முக்கியத் திருப்பம்
ஈடு இணையற்ற அப்பெண்ணின் கடைசி விருப்பம்
"என் உடலின் முக்கிய உறுப்புக்களை எடுங்கள்.
தேவைப்படும் மற்றவர்க்குக் கொடுங்கள்"

பெற்றோரும் மருத்துவரும் கண்மாரி பெய்தனர்
எனினும் அவள் விருப்பப்படி செய்தனர்
மாற்றப் பட்டவை ஏழு உடல் பாகங்கள்
போற்றப்பட வேண்டியவை அப்பெண்ணின் தியாகங்கள்

ஏழு வள்ளல்கள் வாழ்ந்த தமிழ் நாட்டில்
ஏழு உறுப்புக்கள் தானம் செய்த இன்னொரு வள்ளல்
செத்தும் கொடுத்தான் சீதக்காதி – இது பழமொழி
பத்தொன்பது வயதில் ஒருத்தி சென்றாள் அதன் வழி

இந்த உண்மைச் சம்பவம் என்னை பெரிதும் பாதித்தது
ஒரு இளம்பெண் இறப்பிலும் சாதித்தது
மானுடத்தின் மஹத்துவத்தை ஸ்தாபித்தது
நமக்கொரு பாடம் போதித்தது

நாமும் உறுப்பு தானம் செய்ய முன்வரலாமே!
இறந்த பின் கண்ணையும் இதயத்தையும் பிறர்க்குத் தரலாமே!
இன்றே எடுப்போம் ஒரு நன்முடிவு
இப்போதே செய்வோம் உறுப்பு தானத்திற்க்குப் பதிவு

Tuesday, April 17, 2012

புத்தாண்டு வரவேற்பு

ஆண்டுகள் போயின, வந்தன
விதவிதமான பலன்கள் தந்தன
வண்ணப்பூக்கள் கோடி மலர்ந்தன
இன்பம் தந்து பின் உலர்ந்தன
பற்பல நல்லவை நடந்தன
சிற்சில சோதனைகள் கடந்தன
கதவுகள் பல திறந்தன
துன்பங்கள் பெரிதும் பறந்தன
நல்ல நினைவுகள் உறைந்தன
கெட்ட நினைவுகள் மறைந்தன
தடைக்கற்கள் தடுத்து அகன்றன
பாடங்கள் நமக்குப் பகன்றன
இன்னுமோர் புத்தாண்டு: நந்தன
இன்னிசையோடு வரவேற்போம்: தந்தன தந்தன தந்தன...